September 4th, 2025
ஆர்.பி.கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில் மிக பிரம்மாண்டமான முறையில் நடந்த ஆசிரியர்தின நிகழ்ச்சி:
சென்னை, செங்குன்றத்தில் அமைந்துள்ள ஆர்.பி.கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ( 04.09.25) இன்று அனைவரும் வியக்கும் வண்ணம் ஆசிரியர் தினத்தை கொண்டாடினர்.கல்லூரி நுழைவாயில் முதல் விழா நடைபெறும் மேடை வரை 1000 வரைபடங்கள் மற்றும் ஓவியங்கள் "குரு சித்திரம் 2k25 "என்ற தலைப்பில் பல வண்ணத் தோரணங்களுடன் பிரம்மாண்டமான தோற்றத்துடன் காணப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்களுக்கும், கல்லூரி பேராசிரியர்களுக்கும் நல்லாசிரியர் விருதும், கேடயம் மற்றும் மரக் கன்றினையும் கல்லூரி நிர்வாகி மேனாள் நீதியரசர் உயர்திரு கோ.வெங்கடராமன் அவர்கள் வழங்கினார்.ஆசிரியர் களின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்துடன் பல வண்ண ஓவியங்கள் தீட்டிய மாணவிகளை பாராட்டி வாழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி.மோ.மகாலட்சுமி அவர்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்றார். துணை முதல்வர் திருமதி கி.கீதா அவர்கள் சிறப்புரையாற்றினார். கல்லூரி மாணவியர் குரு வணக்கம் செலுத்தும் வகையில் ஆடல், பாடல், கவிதை மற்றும் சிலம்பக்கலை நிகழ்த்தி கோலாகலமாக ஆசிரியர் தினத்தை கொண்டாடினர். மேலும் நன்றியுரை மற்றும் நாட்டுபண்ணுடன் ஆசிரியர்தின விழா இனிதே நிறைவடைந்தது
