Long Human Chain for Mental Health&Peace
October 10th, 2025
img

ஆர்.பி.கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியுடன் இணைந்து "உலக மன நல நாள் " குறித்து நடைபெற்ற மாபெரும் மனிதச் சங்கிலி விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி : உலக மனநல தினத்தின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் 10.10.2025, வெள்ளி அன்று சென்னை, செங்குன்றம் கூட்ரோட்டில் துவங்கி செங்குன்றம் கேலக்சி மஹால் வரை சுமார் 1500 மாணவியர் ஆசிரியர் பொதுமக்கள் என கைகோர்த்து, பதாகைகளை ஏந்தி, மனநலம் குறித்த வாசகங்களை உரக்கக் கூறி மனித சங்கிலி விழிப்புணர்வை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வினை டாக்டர் ஹீசைன் பாஷா மனோ தத்துவ நிபுணர் சர்வதேச வாழ்க்கைப் பயிற்சியாளர், சிறப்பு கல்வியாளர் - வழிகாட்டி (HCMAP) அவர்கள் வரவேற்புரையாற்றி துவக்கி வைத்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சியினை சிறப்பு விருந்தினரான திரு லயன் பி.மணிசேகர்BMJF மாவட்ட கவர்னர் அவர்கள் மற்றும் திரு G.பிரசாந்த் கிருஷ்ணா,பல்நோக்கு மருத்துவமனையின் இயக்குனர் இருவரும் கொடி அசைத்து துவங்கி வைத்தனர். இவர்கள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்களும் நல்ல மனநலத்தினை பெற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தி மனித சங்கிலி விழிப்புணர்வு முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர். ஆர்.பி.கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியின் முதல்வர் மற்றும் தலைவர் (HCMAP) முனைவர் திருமதி மோ. மகாலட்சுமி அவர்கள், கல்லூரி நிர்வாகி, நீதியரசர் உயர்திரு கோ.வெங்கடராமன் ஐயா அவர்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி கூறி, உடல் நலம் பேணல் மட்டும் பலம் அல்ல உள்ளத்திணையும் நலமாக வைப்பது தான் பலம் என்று அறிவூட்டி தலைமை உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர் திரு ராஜா ராபர்ட் செங்குன்றம் சரகம் துணை ஆணையர் அவர்கள், மனநலம் குறித்து இது ஒரு மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வு என்று உரையாற்றினார்.    

சிறப்பு விருந்தினர் திரு ராஜா ராபர்ட் செங்குன்றம் சரகம் துணை ஆணையர் அவர்கள், மனநலம் குறித்து இது ஒரு மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வு என்று உரையாற்றினார்.

திரு ப.வெங்கடேஷ் மதன் குமார், மன இயல் நிபுணர் அவர்களும் மனநலத்தினை எவ்வாறு எல்லாம் பேணி காத்திட வேண்டும் என்று மிக எளிமையாக விளக்கி கூறினார்.

திரு முகமது அபூபக்கர் ஒருங்கிணைப்பாளர் -(HCMAP) அவர்கள் மிகுந்த சிறப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வினை குறித்து வியந்து பாராட்டி உரையாற்றினார்.

ஆர்.பி.கோத்தி ஜெயின் கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்-(HCMAP )திருமதி கி.கீதா அவர்கள் இதுவோர் மாபெரும் முயற்சி என்று மனித சங்கிலி விழிப்புணர்வு குறித்து பாராட்டி உரை நிகழ்த்தினார்.

மேலும் திரு. கனகராஜ், துணை ஆணையர், செங்குன்றம் போக்குவரத்து காவல் நிலையம் அவர்கள் ;திரு.விஜயகுமார், காவல் ஆய்வாளர்.

Activity Images