கிராமியத்திருவிழா
January 12th, 2026
img

ஆர். பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில் கோலகலமனா கிராமியத்திருவிழா: சென்னை, செங்குன்றத்தில் அமைந்துள்ள ஆர்.பி.கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில், தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு 'FINE ARTS CLUB' சார்பில் 12.01.2026 திங்கள் அன்று காலை 9:30 மணிக்கு கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவிகள், அலுவலகம் மற்றும் பிற பணியாளர்கள் அனைவரும் இணைந்து புதுப் பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கும் உழவர்களுக்கும் மற்றும் காளைகளுக்கும் நன்றி செலுத்தினர்.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராகக் கல்லூரி நிர்வாகி நீதியரசர் உயர்திரு கோ. வெங்கடராமன் ஐயா அவர்கள் தலைமை வகிக்க கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி மோ. மகாலட்சுமி மற்றும் துணை முதல்வர் திருமதி கி. கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முத்தாய்ப்பாக 51 தட்டு வரிசை, தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட அம்மனுக்கு படைக்கப்பட்ட விதம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். பரதத்தில் தொடங்கி கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், புலி வேடம், பொய்க்கால் குதிரை, சிலம்பம், வில்லுப்பாட்டு மற்றும் பொம்மலாட்டம் என ஆடிபாடிக் கொண்டாடினர். கோலப்போட்டி மற்றும் பட்டி மன்றத்தில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் கயிறு இழுத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இத் திருவிழாவினை 'Fine Arts Club' ஆசிரிய மற்றும் மாணவிய ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்த்த நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவடைந்தது.

Activity Images